ஏனடா மானிடா?

மே 5, 2008

பெண்ணைச் சீரழித்த நீ
இப்போது
மண்ணையும் சீரழிக்கத்தொடங்கிவிட்டாய்!

மக்காத பாலீத்தீன் குப்பையைக் கொண்டு
மண்ணைச்சீரழிக்கிறாய்
பூச்சிக்கு மருந்தடிக்கிறேன் என்று
மண்ணின் வளத்தை
சீரழிக்கிறாய்

சாராயம் குடித்து
மனிதனின் குடல் மட்டும்
வேகவில்லையடா!
சாராய ஆலையின் கழிவை
மண்ணில் வீசி
மண்ணைக்கொன்றாய்
சாயக்கழிவை
ஆற்றில் விட்டு
ஆற்றைக் கெடுத்தாய்

ஏனடா மானிடா
எதை விட்டு வைத்தாய் நீ

எண்ணை ஆலையில் வரும்
கழிவை ஆற்றில் விட்டு
ஆற்றைக்கொன்றாய்
காகித ஆலையின் கழிவை
எரித்து சாம்பல் மேடு ஆக்கினாய்
இப்படி எதைவிட்டுவைத்தாய் நீ
உன் வீடு அழகு பெற வேண்டுமென்பதற்காக
மரங்களை வெட்டினாய்
உன் தூக்கத்துக்கு
கட்டில் செய்ய
ஈட்டி மரத்தை வெட்டினாய்
உன் வீட்டுக்கு ஜன்னல் செய்ய
தேக்கு மரத்தை வெட்டினாய்

காடுகளை அழித்தாய்
அதனால் மழை இல்லை மண்ணில்

ஏனடா மானிடா
எதைவிட்டு வைத்தாய் நீ

முன்பெல்லாம்
மண்ணைத்தோண்டினால்
நீர் வரும்.
ஆனால் வருங்காலத்தில்
பாலித்தீன் கவர்தான் வரும்.

இப்போதெல்லாம்
சுதந்திரதினத்துக்கு மட்டும்
கொடியேற்றுவதில்லை
தினம் தினம் கொடியேற்றுவிழா
ஏனெனில்
நாளொரு கட்சி
பொழுதொரு கொடி
எத்தனை கட்சி
எத்தனை கொடி
யாருக்கும் தெரியாது

ஏனடா மானிடா
என்ன செய்கிறாய் நீ!

முன்பெல்லாம்
அயல்நாட்டுடன் சண்டையிடுவோம்
இப்போதெல்லாம்
நம் நாட்டுக்குள்ளேயே
இல்லையில்லை
நம் மாநிலத்துக்குள்ளேயே
அதுவும் இல்லை
நம் ஊருக்குள்ளேயே
ஜாதிச்சண்டை
மதச்சண்டை
இப்படி
எவ்வளவு சண்டை
என
எத்தனை எத்தனை சண்டை

கோயி பூசாரியாக இருக்கவேண்டியவன்
சாதுவாக இருப்பான்
ஆனால் அவனோ
நாலு பேரை
வெட்டுகிறான்

ஏனடா மானிடா
என்ன செய்கிறாய் நீ!

தேசத்தலைவர்களுக்கு
விடுதலைப்போராட்ட வீரர்களுக்கு
விழா எடுப்பார்கள்
இல்லையெனில்
கோயிலில் சாமிக்கு விழா எடுப்பார்கள்
ஆனால் இன்றோ
திரைப்படம் நூறுநாள் ஓடினால் விழா

ஏனடா மானிடா
என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ

ஆசிரியப்பணி அறப்பணி என்பார்கள் முன்பு
ஆனால் இன்றோ
ஆசிரியப்பெண்மணி அடிக்கோலால் அடித்து
மாணவன் மண்டை உடைந்தது என்கிறார்கள்

மருத்துவப்பணி மகேசன் பணி என்பார்கள் முன்பெல்லாம்
ஆனால் இன்றோ (மருத்துவன் சரியான நேரத்துக்கு வராமல்)
மருத்துவன் நேரம் தவறியதால்
கர்ப்பிணிப்பெண் மரணம் என்று செய்தி வருகிறது.

தாதிப்பெண்ணுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார் அன்னை தெரசா
ஆனால் நர்ஸ் சரசா செய்த தவறால் குழந்தை மாறி பெற்ற குழந்தை
எது எனத்தெரியாமல் தவிக்கிறார்கள்.

ஏனடா மானிடா
என்ன செய்கிறாய் நீ!

இவையெல்லாம் மாறி
அன்பெனும் மரம் வைத்து
அதில் பண்பெனும் நீரூற்றி
அதில் மனித நேயம் எனும் பூப்பூத்து
அதில் தேச ஒற்றுமை எனும் காய்காய்த்து
கனி கொடுப்பது எப்போது?

நீரைத்தேடும் வேர்போல்
ஆறைத்தேடும் நீர் போல்
தேரைத்தேடும் திருவிழா போல்
திருவிழா தேடும் மக்கள் போல்

ஏனடா மானிடா நீ வாழ்வது எப்போது?

Hello world!

மே 5, 2008

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!


Follow

Get every new post delivered to your Inbox.